த.ம.தேவேந்திரன். வவுனியா: ஒலிம்பியாட் பதிப்பகம், மந்திரி பவனம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிறைவேட் லிமிட்டெட், 501/2 காலி வீதி).
16 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 30., அளவு: 21×15 சமீ.
இந்நூல் இலங்கையரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகிய எல்லே பற்றிய வரலாறு, விளையாட்டில் அனுசரிக்கும் விதிமுறைகள், தேவைப்படுகின்ற திறன்கள், அவற்றுக்கான பயிற்சி முறைகள், விளையாட்டின்போது வழங்கப்படும் மத்தியஸ்தம் என்பனவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் வழங்குகின்றது. நூலாக்கக் குழுவில் எஸ்.மகேந்திரன், ஜனாப் அலியார் சியாம், செல்வி அ.வதனா பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர். நூலாசிரியர் தேசிய எல்லே விளையாட்டு மஸ்தியஸ்தராகப் பணியாற்றுபவர். உடற்பயிற்சிக் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்.