வே.தங்கராசா. திருக்கோணமலை: சாயி பிரசுரம், 78, பேராலய வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம், 39, அருணகிரி வீதி).
xi, 42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
சிறுவர்கள் இளமையில் இருந்தே தாய், தந்தை, குருவை தெய்வமாகப் போற்றவேண்டும் என்றும், நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், மனதில் உறுதி இருந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்றும் போதிக்கும் 30 தலைப்புகளிலான பாடல்களைக் கொண்ட நூல். கவிதைகள் இளம் உள்ளங்களில் நன்கு பதியக்கூடிய வகையில் அறிவுரை பகர்வதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் வேலாயுதம் தங்கராசா, முதலாம் தரப் பயிற்றப்பட்ட ஆசிரியர் தகைமையுடன், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரியாகி முதலாம் தர அதிபர் பதவியையும் பெற்று தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் மகாவித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52449).