த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அருத்துசா ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
iv, 97 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-1162-35-8.
சிறுவர்களுக்கான கவிதைத் துறையில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் இருபது தமிழக/இலங்கைக் கவிஞர்களது பாடல்களை இந்நூலில் தரிசிக்கமுடிகின்றது. கவிமணி சி.தேசிகவிநாயகம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், அழ.வள்ளியப்பா, பூவண்ணன், வாணிதாசன் (அரங்கசாமி), செல்வகணபதி, ரா.பொன்ராசன் ஆகிய தமிழகத்தின் கவிஞர்களினதும், ஈழத்துக் கவிஞர்களான நவாலியூர் சோமசுந்தரப் புலவர், யாழ்ப்பாணன்-வே.சிவக்கொழுந்து, மு.நல்லதம்பி, க.வேந்தனார், இ.நாகராசன், எம்.சி.எம்.சுபைர், இ.அம்பிகைபாகன், பா.சத்தியசீலன், வ.இராசையா, சாரணா கையூம், திமிலைத் துமிலன் (சி.கிருஷ்ணபிள்ளை), வாகரைவாணன் (ச.அரியரத்தினம்) ஆகியோர் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் அவர்களது படைப்புக்களில் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க சிறுவர் பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.