நெடுந்தீவு லக்ஸ்மன் (இயற்பெயர்: நாகேந்திரர் இலட்சுமணராசா). சென்னை 600 006: சவுத் இந்தியா பப்ளிக்கேஷன்ஸ், எண். 249, அண்ணா சாலை, முதல் தளம், தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவிலை. (சென்னை 600 006: சவுத் இந்தியா பப்ளிக்கேஷன்ஸ்).
48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 22×14 சமீ.
பல்வேறு தலைப்புகளில் குழந்தைகள் சுவைக்கும் வகையில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சில வழிகாட்டுகின்றன. சில இயற்கை எழிலை ரசிக்கச் சிறார்களைத் தூண்டுகின்றன. சில நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. ஒவியர் செந்தமிழின் சித்திரங்கள் கவிதைகளுக்கு மெருகூட்டுகின்றன. தமிழ்ச் சிறார்களை மனதில் இருத்தி உருவாக்கப்பட்டுள்ள இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர் நெடுந்தீவைச் சேர்ந்தவர். தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியவர். இவரது முதல் நூலாக உயிர் மூச்சு என்ற கவிதைத் தொகுதி 2003இல் வெளிவந்தது. சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34119).