ஜெனீரா தௌபீக் கைருல் அமான். கிண்ணியா: அல்-அக்தாப் இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (கொழும்பு 10: யூ.டீ.எச். கொம்ப்யு பிரின்ட், 51/42, மொஹிடீன் மஸ்ஜித் வீதி).
viii, 50 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×14.5 சமீ.
கற்போம் வாரீர், எளிமையாய் வாழு, வேற்றுமையில் ஒற்றுமை, நட்பு, போன்ற 47 தலைப்புகளில் மழலைகளின் ஆற்றலை வளர்ப்பதற்கும் அவர்கள் இசையுடன் பாடி மகிழ்வதற்கும் எற்றவகையில் அமைந்த பாடல்களைக்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் உதவும் நோக்கில் இந்நூல் வெளிவந்துள்ளது. அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1991இல் பயின்ற வேளையில் இவரது முதலாவது நூல் பாலர் பாடல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47502).