அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2003. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 955-8715-14-X.
மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைப் பாடல்கள் இவை. அபிநயம் பிடித்து ஆடுவதற்கும் பாடுவதற்கும் இவை உகந்தவை. 22ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. ஏற்கெனவே சிறுவர் இலக்கியத்துக்கான அகளங்கனின் பங்களிப்புகளாக செந்தமிழும் நாப்பழக்கம், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை ஆகியவை வெளிவந்துள்ள நிலையில் இவரது முதலாவது குழந்தைப் பாடல் நூல் இதுவாகின்றது.