10422 பாட்டு விளையாட்டு.

P. சத்தியசீலன். யாழ்ப்பாணம்: திருமதி கலாதேவி, கலைவண்ணம், சின்னப்பா ஒழுங்கை, நவாலி தெற்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜுன் 1989. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம்).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 12., அளவு: 21.5×14 சமீ.

தனித்துவமானதோர் எழுத்துப்பாணியின் மூலமும், நேர்த்தியான நூலாக்கங்களின் மூலமும் ஈழத்துச்சிறுவர் இலக்கியத்தில் தனியிடம் பெற்றவர் பாவலவன் பா.சத்தியசீலன். 1988 சித்திரை மாதத்தில் ரூபவாகினியில் ஒளிபரப்பாகிய பாப்பா புதிர்ப்பா நிகழ்ச்சியிலே சிறுவர்களோடு சேர்ந்து தாம் வழங்கிய பாடல்கள் பலவற்றைச் சேர்த்து பாட்டு விளையாட்டு என் இந்நூலை வெளியிட்டுள்ளார். நகைச்சுவையும் புதிர்ச்சுவையும் பொருந்த அழகிய சந்தங்களுடன் அமைந்துள்ள பாடல்கள் இவை. ஆமை, யானை யார், வண்ணத்துப்பூச்சி, நத்தையார், பலூன், பாட்டை விடையுடன் இணையுங்கள், நிரையாய் வருகிற பூ, பூட்டாத பூட்டு, பாவைப்பிள்ளை, நடைவண்டி, ஆமையார், சீட்டாட்டம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 83505).

ஏனைய பதிவுகள்

Casino Bonus Ohne Einzahlung 2024

Content Boni Ohne Einzahlung | MR BET AT Glücksspiel Populäre Slots Für Einen 15 Euro Bonus Ohne Einzahlung Wie Komme Ich Am Besten An Den