நா.மகேசன். கொழும்பு 6: நா.மகேசன், 59, மூர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1974. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122, சென்றல் வீதி).
xii, 87 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 3.50, அளவு: 18×12.5 சமீ.
எல்லாம் தெரிந்த எமநாதர், வத்தகைப்பழம், எங்கள் வாயில் மண்ணடா, அற்றார் பசியை அகற்றுக, நல்லோர்க்கு அழகு, பனையின் கதை, சும்மா தின்றான் பழம், வேட்கை தடுப்பது அறிவன்றோ, ஆபத்தில் நண்பன், புள்ளிமானின் சுள்ளிக்கால்கள், குட்டிச் சிவலிங்கன், பள்ளிக்கூட பஸ்வண்டி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான 12 பாடலும் கதையும் சேர்ந்த சிறுவர் நூல். 1933இல் பண்டத்தரிப்பில் பிறந்த நா.மகேசன் இலங்கை அரசாங்கக் கணக்காளராகப் பணியாற்றியவர். வானொலி மாமா என்று பலராலும் அறியப்பெற்றவர். இலங்கை வானொலியில் 1965-81 காலப்பகுதியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தியவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவக்குப் புலம்பெயர்ந்து சிட்னியில் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13447).