மருதமைந்தன் (இயற்பெயர்: எம்.எஸ்.எஸ். ஹமீத்). காத்தான்குடி: பாவலர் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கல்முனை: சைன் வேர்ல்ட், டிஜிட்டல் பிரஸ்).
60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 20×14 சமீ.
இறுக்கமும் சொற்செட்டும் இதமான ஒத்திசைவும் கொண்ட 52 சிறுவர் பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் மனங்கவரும் பாடல்கள் நிறைய உண்டு. இலக்கம் தொடர்பான எண்ணக்கருவை ஊட்டுவன, நன்னடத்தைக்கு வழிகாட்டுவன, சுற்றுச்சூழல் அறிவை வளர்ப்பன, தொழில் தொழிலாளர் மேம்பாட்டைக் காட்டுவன, பாலர்கள் காணும் காட்சிகளைக் காட்டுவன, அவர்களின் அனுபவங்களைப் பறைசாற்றுவன என்று அவற்றை வகைப்படுத்திச் செல்லலாம். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85068).