10433 கூடிக் குதிப்போம்: சிறுவர் நாடகம்.

நெலோமி அன்ரனி குரூஸ், வவுனியா: திருமதி அ.நெலோமி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், கந்தசாமி கோவில் வீதி).

(3), 49 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×13 சமீ.

ஒற்றுமையே பலம், கூடி வேலை செய்வோம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, உண்மை அழகு, வேற்றுமைகள் ஏதுமில்லை ஆகிய ஐந்து சிறுவர் நாடகங்களைக் கொண்ட தொகுப்பு. அனைத்தும் ஒற்றுமையாக வாழ்தல் பற்றிய கருத்துக்களை விதைப்பன வாயுள்ளன. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில்  2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த சிறுவர் இலக்கிய  நூலுக்கான பரிசை வென்ற நூல்.

ஏனைய பதிவுகள்

14582 எல்லையற்ற பெருவெளி.

க.முத்துராஜா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 90 பக்கம், விலை: ரூபா 450.,அளவு: 20.5×14.5 சமீ., ISBN: