10441 நல்லவை மட்டுமே நன்மை பயக்கும்.

தேவராசா ஜீவராஜி (கதை), எஸ்.ராஜன் (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-68-7.

செல்வி ஜீவராஜி தேவராஜா யாழ்ப்பாணம் மந்துவில்லைச் சேர்ந்தவர். உள்ளக இடப்பெயர்வின்பின்னர் மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தில் வசித்துவருகின்றார். மன்னாரில் சுகாதாரப்பணி உதவியாளராகப் பணியாற்றும் அதேவேளை சமூக ஊக்குவிப்பாளராக, தேசிய இளைஞர் சேவைகள் மையத்தின் உளவளத்துணையாளராக, வேலை வங்கிப் பொறுப்பாளராக, அறநெறிப்பாடசாலை ஆசிரியராக, நாடகக் கலைஞராக என்று பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம்மிக்க ஜீவராஜி எழுதிய  நன்நெறி புகட்டும் 10 குட்டிக்கதைகளின் தொகுப்பு இது. நல்லவை மட்டுமே நன்மை பயக்கும், யானையும் எறும்பும், படிப்பதற்கு வயது தடையில்லை, செய்வதைத் திருந்தச் செய், கவனக்குறைவு பேரழிவு, இருப்பதை வைத்துத் திருப்திகொள், ஓநாயும் அணிலும், கசப்பாக மாறிய கொய்யாக் கனி, பேராசை பெரும் நட்டம், சோம்பேறித்தனத்தின் விளைவு, ஆகிய கதைகள் இதில் அடங்குகின்றன.

ஏனைய பதிவுகள்