சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: சமரபாகு சீனா உதயகுமார், கூனந்தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (நவிண்டில்: அபிஷேக் பதிப்பகம், கரணவாய் வடமேற்கு).
xxi, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-4125-8-3.
சிறுவர்களின் மனநிலைக்கு ஏற்ப இலகு தமிழில் எழுதப்பட்ட 27 கதைகள் அடங்கிய தொகுப்பு இது. இக்கதைகள் கந்தையா வாத்தியாரப்பு என்பவரால் சொல்லப்படும் சுவாரஸ்யமான கதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. சாதுர்யக் கதைகள், ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், தத்துவக் கதைகள், அறநெறிக் கதைகள், சூழலியல் கதைகள், போதனைக் கதைகள், உளவியல் கதைகள், விஞ்ஞானக் கதைகள், முயற்சியைத் தூண்டும் கதைகள் என பல்வகைப்படுத்தக்கூடியவகையில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57658).