10443 படிப்பினை தரும் சிறுவர் கதைகள்.

அஷ்ஷெஹ் எம்.டீ.எம்.ஸாஹிர். மாவனல்ல: அஷ்ஷெஹ் எம்.டீ.எம். ஸாஹிர், மாலியத்த, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (மாவனல்ல: நியூ யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ்).

vi, 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-0260-07-2.

சிறுவர்களுக்கேற்ற நல்வழி கூறும் 22 இஸ்லாமியக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. சிறுவனின் விவேகம், பெரியாரின் உபதேசம், புத்திக் கூர்மை, நற்பண்பின் விளைவு, தோட்டக்காரனும் அஹ்மதும், தீய செயலின் விளைவு, பேராசை பெரும் நஷ்டம், காகமும் ஓநாயும், ஒத்துக்கேட்டல், புத்தியுள்ள உழவன், நல்லவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள், எறும்பின் படிப்பினை, இறை படைப்புகளுக்கு இரக்கம் காட்டுவது இன்றியமையாததாகும். வீரச் சிறுவன், சுலைமான் (அலை) அவர்களின் சிறந்த தீர்ப்பு, சுலைமான் (அலை) அவர்களின் நுண்ணறிவு, மணியை கட்டுவது யார், தேனியும் கரடியும், வைத்தியக் குரங்கு, எறும்பும் கோதுமை விதையும், சுதந்திரமாக வாழவிடு, ஒருவருக்கொருவர் பிளவு வேண்டாம், சிட்டுக் குருவியின் புத்திக் கூர்மையும் விடா முயற்சியும், இரண்டு ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு முயல், உபாயத்தின் விளைவு, சுபியானித்தௌரி (ரஹ்), சிறுவர்களது உள்ளங்களுக்கு விருந்தளிக்கின்ற சிந்தனைத் துளிகள் ஆகிய தலைப்புகளில் 22 கதைகளும் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 180266). 

ஏனைய பதிவுகள்