குணசேகர குணசோம (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-3075-7.
குணசேகர குணசோம கிழக்கிலங்கையில் பொத்துவில் நகருக்கு அருகிலுள்ள பாணமையில் பிறந்தவர். பாடசாலை ஆசிரியரான இவர் படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் அறியப்பெற்றவர். 35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் பெரும்பாலும் இளையோர் நூல்களையே எழுதிவந்துள்ளார். இந்நாவல் பாணமைப் பற்றைப் பின்புலமாகக் கொண்டது. இதில் இடம்பெறும் குள்ளர்கள் பற்றிய கூற்று இப்பகுதி மக்கள் பாரம்பரியமாகச் சொல்லி வருவதாகும். இப்பிரதேசத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பலமும் பயங்கரமும் மிகுந்த லேனமைப் புலிகள், பாணமைப்பற்றுக் காடுகளில் வாழ்ந்து தற்போது அருகி வரும் ஒருவகைப் புலியாகும். அடர்வனத்தின் மத்தியில் பௌத்த புதைபொருட்கள் நிறைந்த பாணமைப்பற்று, குடும்பிக்கல், பம்பரகஸ்தலாவை, வெஹெரகம போன்ற வரலாற்றுத் தலங்கள் தொடர்பான தகவல்களையும் இப்படைப்பில் ஆசிரியர் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இவை அனைத்தும் கற்பனை கலந்து ஒரு விறுவிறுப்பான நாவலாக மலர்ந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 177926).