10452 சிங்கராஜா.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கிய பவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).

vi, 7-80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-54011-7-3.

கலாபூஷணம் வே. சண்முகநாதன் எழுதிய பதினொராவது நூல் இது. சிறுவர் இலக்கியமாக இவர் வெளியிட்ட இரண்டாவது நூலாகவும் இது அமைகின்றது. சரித்திரக் கதை போன்ற தோற்றத்தை வழங்கினாலும் இது வரலாற்றாதாரங்கள் எதுவும் அற்ற புனை கதையாகும். இராட்சதர்கள் பற்றிய உருவகத்தையும், ட்ரகுல்லா என்ற குருதி சுவைக்கும் ஆங்கில பேய்க் கதாபாத்திரங்ளையும் இணைத்து ஆசிரியர் இங்கு தனத வலிமையால் சுவைமிகுந்த பாத்திரக்கட்டமைப்பை மேற்கொண்டுள்ளார். சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கதைப்போக்கும் கதைக்குப் பொருத்தமான சித்திரங்களும் நூலுக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001435). 

ஏனைய பதிவுகள்