தனுஜா நிஷாந்தி அயகம (சிங்கள மூலம்), பீ.தேவகி (தமிழாக்கம்), மதி புஷ்பா (ஓவியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
20 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-9396-24-6.
பிக்கிபா என்றொரு அழகிய தவளைஅரண்மனைத் தடாகத்தில் வாழ விரும்புகின்றது. தன்னுடைய இயல்பான இருப்பிடத்திலிருந்து ஆடம்பரமான அரண்மனைக்குச் செல்வதற்கான பயணத்தை ஆரம்பிக்கின்றது. வழி நெடுக பிக்கிபா பல சிரமங்களை எதிர்கொள்கின்றது. உணவு கிடைக்காததால் மயங்கியும்போகின்றது. ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்காததால் பிக்கிபா இப்போது அரண்மனைத் தடாகத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றது. தனுஜா நிஷாந்தி அயகம சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆக்கக் கதை புனைவோர்கள் மற்றும் சித்திரக்காரர்களுக்கான 2007ம் அண்டு சுழழஅ வழ சுநயன நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்கப் பட்டறையில் கலந்துகொண்டபோது எழுதிய இக்கதை இவரது ஐந்தாவது படைப்பாக்கமாகும். கனிவுமதி (மதிபுஷ்பா), கண்டியில் பிறந்தவர். கவிஞரும் ஓவியருமான இவர் தமது படைப்பாக்கங்களை ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகைளில் பரவலாகப் பிரசுரித்து வந்தவர். பல அமைப்புகளிலிருந்து விருதுகளும் பட்டங்களும் பெற்ற இவருக்கு ஒவியத்துறைக்காக 2007ஆம் ஆண்டு கொழும்பு கம்பன் கழகம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பேரில் வழங்கப்படும் எற்றமிகு இளைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.