10457 மண் குடிசையில் மணி விளக்குகள்.

சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-41-0.

1991இல் சிங்கள மொழியில் ‘மடி கொதர லமயி’ என்ற தலைப்பில் வெளிவந்து இன்றளவில் 15முறை மீளச்சிடப்பெற்ற  சிங்களச் சிறுவர் நூலின்  தமிழ்மொழியாக்கம் இது. ஓவியத் திறமைமிக்க நூலாசிரியரின் கைவண்ணத்தில் அமைந்த சிறுவர்களுக்கேற்ற சித்திரங்களுடன் இந்நூல் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்வந்தரின் மாளிகையைத் தேடிச்செல்லும் ஏழைக் குழந்தைகள் செல்வந்தர் வீட்டு ஊமைப் பிள்ளையுடன் ஏற்படுத்திக்கொண்ட அபூர்வமான நட்புறவும், ஏழைக் குழந்தைகள் காட்டிய அன்பினாலும் ஆதரவினாலும் பேச்சிழந்திருந்த அந்தச் செல்வந்தச் சிறுமி மீண்டும் பேசும் சக்தியைப் பெற்றதும் இக்கதையின் கருவாகும். பிரபல பத்திரிகையாளரான அமரர் தொன் தர்மபால வெத்தசிங்ஹவின் பாரியாரான திருமதி சிபில் வெத்தசிங்க, தனது 15ஆவது வயதில் எச்.டி.சுகதபாலவின்  ‘நவம’ வாசிப்பு நூலுக்கு ஓவியங்களை வரைந்திருந்தார். 19ஆவது வயதில் ஒரு ஓவியக் கலைஞராக பத்திரிகை உலகிற்கு அறிமுகமானார். அன்றிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக ஓவியத்துறையிலும் சிறுவர் இலக்கியத் துறையிலும் சிங்கள இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றுத் திகழ்கிறார். இவரது குடைத்திருடன் (குட ஹொரா)  என்ற சிறுவர் நூல், ஜப்பான், ஜக்கிய இராச்சியம், நோர்வே, சுவீடன், டென்மார்க், சீனா, கொரியா தாய்வான் முதலிய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு வெளிநாட்டுக் குழந்தை இலக்கியத்துக்கான ஜப்பானிய விஷேட பரிசும் 1986இல் கிடைத்திருநதது.

ஏனைய பதிவுகள்

Alles Spitze Kostenlos Spielen

Content Spielangebot: Slots Und Weitere Geldspiele | columbus deluxe Slot Free Spins Die Besten Online Casino Bonusangebote 2024 Beste Online Casino Slots Echtgeld Mit Auszahlungsquote