டெனிஸன் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-2719-1.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ‘ஆகாசே மாளிகாவ’ என்ற தலைப்பில் சிங்களத்தில் வெளிவந்த இளையோர் நாவலின் தமிழாக்கம் இது. 2001இல் இதன் ஆங்கில மொழியாக்கம் The Castle in the Sky என்ற தலைப்பில் வெளிவந்தது. ஒரு அரச கதை போன்ற பாங்கில் கதையை வளர்த்துச் சென்று இளைஞர்களின் சக்தி எத்தகையதென்பதை இறுதியில் புரிந்துகொள்ளச் செய்கிறார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சிங்கள இலக்கியத் தளத்தில் இயங்கிவரும் டெனிஸன் பெரேரா 1993இல் சுதந்திர இலக்கிய விருது, 2000-2003களில் வித்தியோதய பல்கலைக்கழக விருது, 2001இல் கொடகே தேசிய சாஹித்திய விருது, 2006இல் அரச இலக்கிய விருது ஆகியவற்றைத் தனதாக்கிக் கொண்டவர்.