தெனகம சிரிவர்தன (சிங்கள மூலம்), பரிபூரணன் (தமிழாக்கம்). கொழும்பு 10: கொடகே பொத் மெதுர, எஸ்.கொடகே சகோதரர்கள், இல.675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
128 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-1253-1.
எல்.ரீ.ரீ.ஈ. சிறுவர் போர் வீரர் கதைத் தொடரில் 5ஆவதாக வெளிவந்த சிங்கள நூலின் தமிழாக்கம் இதுவாகும். கண்டி, பல்லேகல திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருந்த 20 தேர்ந்த முன்னாள் சிறுவர் போராளிகளை சந்தித்து இராணுவமுகாம் சுற்றாடலில் வாழ்ந்த அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் இச்சிறுவர் நாவல் எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருமனிதநேயமற்ற மனிதப்படுகொலையில் இன்பம் காணும் ஒரு மோசமான பயங்கரவாத இயக்கமாகச் சித்திரிப்பதில் ஆசிரியர் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.