ஆ.முல்லைதிவ்யன். வல்வெட்டித்துறை: ஆனந்தமயில் முல்லைதிவ்யன், பொலிகை கலை இலக்கிய மன்றம், கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, 2014. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்).
vi, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-7603-00-1.
இருத்தல் பற்றியே அதிகமாகப் பேசும் இக்கவிதைத் தொகுதி, போரின் கொடூர முகத்தையும், அது விட்டுச் சென்ற மன வடுக்கiயுமே பக்கம் தோறும் பதிவுசெய்கின்றன. போர் தின்று தீர்த்த எச்சங்களின் மிச்சங்களாகிக் கிடக்கும் தாய்மண்ணின் நிஜங்களைப் பதிவுசெய்யும் இவ்விளங் கவிஞனின் கவிதை வரிகளில் இருத்தல் பற்றியதான ஏக்கம் தெரிகின்றது. அகதி வாழ்வும், இழப்பும், ஆக்கிரமிப்பும், தாய் மண்ணில் இடம்பெறும் அந்நியச் சுரண்டல்களைக் கண்டும் காணாதிருக்கும் கையறுநிலையும் எம்மவர் உள்ளங்களில் புரையோடிக் கிடக்கும் காயங்கள் தான். அந்தக் காயங்களுக்கு கவிதைகொண்டு மருந்திட்டுத் தற்காலிக ஆறதல் கொடுக்க முனைந்திருக்கிறார்.