மண்டூர்த் தேசிகன். (இயற்பெயர்: ஞானதேசிகன்). மட்டக்களப்பு: மண்டூர்க் கலை இலக்கிய அவை, மண்டூர், 1வது பதிப்பு, ஜுலை 2000. (மட்டக்களப்பு: இளம்பிறை ஓப்செட்).
76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
இலங்கையின் நவீன கவிதையின் தோற்றம் அசமத்துவ வளர்ச்சி நிலைகொண்ட ஈழத்துப் பிரதேசங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெறுகின்றது. மண்டூர்ப் பிரதேசத்தில் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே அது நிகழ்கின்றது. அத்தகைய நவீன கவிதைகளின் தோற்ற நிலையில் இத்தொகுப்பு முதன்மை இடம் பெறுகின்றது என்றே கூறவேண்டும். இத்தொகுப்பின் கவிதைகளுள் பெரும்பான்மையானவை நிகழ்கால வாழ்வினைப் பாடுபொருளாகக் கொண்டவை. உள்நாட்டுப் போர் பற்றியும் அகதி நிலை, உயிர் உடமை இழப்பு போன்ற அதன் விளைவுகள் பற்றியும் பேசுகின்றன. கலைப்பட்டதாரியான மண்டூர் தேசிகன் மட்டக்களப்பு, மண்டூர் பாலமுனை அ.த.க.பாடசாலையின் அதிபராகப் பணியாற்றியவர். இந்நூல் இவரது முதலாவது படைப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23151).