டிலோஜினி மோசஸ். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்;ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).
xx, 35 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-42447-0-0.
யாழ்ப்பாணம், கட்டைக்காடு-முள்ளியானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் டிலோஜினி மோசஸ். கிளிநொச்சி புனித திரேசா கல்லூரியில் 2016 கலைப்பிரிவில் பயிலும் மாணவியான இவரது கன்னிக் கவிதைத் தொகுப்பே இதுவாகும். இவரது கவிதைகள் அனைத்தும் சமூக அவலங்கள், பெண்ணியம்சார் பிரச்சினைகள், பண்பாட்டுச் சீரழிவுகள், கல்வி, மொழி, இனம், தேசியம், ஏக்கம், ஆசைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களைத் தமது பாடுபொருள்களாகக் கொண்டவை. என் தெய்வங்கள் என்ற கவிதை முதல், சுதந்திரமாய் என் கவிதை என்ற கவிதை ஈறாக 40 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்கொண்டுள்ளன. மீண்டும் வருவாயா?, கரிகாலன் பிறப்பானா? போன்ற கவிதைகளில் நிகழ்கால அவலங்களிலிருந்து விடுதலைபெற ஏங்கும் எம்மினத்தின் மனநிலை வெளிப்படுகின்றன. சொல்லமுனையும் விடயம் குறித்த தெளிவும், கருத்தாழமும், கருத்தாடலும், அவற்றை வெளிப்படுத்தும் உத்திகளும் இவ்விளம் படைப்பாளியிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்காட்டிநிற்கின்றன.