அ.பேனாட். வவுனியா: கவிதா வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2009. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு).
52 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.
‘எனது கவியாத்திரையின் படிமம் 21ம் நூற்றாண்டின் சின்னம், சித்திரம், முதுசம், வாழ்வின் வெளிச்சம், காதலின் மாண்பு, என்றியங்குவது எனது கவிதை. உண்மையில் காதலென்பது என்னை அவளும் அவளை நானும் கண்டுகொள்ள உதவும் கண்ணாடி. அதுதான் இலக்கியமும் அன்புப் பிணைப்பும். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், காதல் சிற்றன்பமென்பதெல்லாம் பொய், தவறானது. அது பேரின்பம், ஆண் பெண்ணுக்கும், பெண்ஆணுக்கும்அடங்குதல் அடிமையாதல் என்பதாகும்’ என்று விரிந்த அறிமுகத்துடன் தனது கவிதைகளை இக்கவிஞர் இந்நூலில் பதிவுசெய்துவிட்டு ‘எனது ஊற்றும் உள்ளமும் உங்களிடத்தில் இனி கவிதைகளை ரசிக்கலாம்’ என்று அழைப்பு விடுகின்றார். முல்லை மணி அவர்களின் அணிந்துரையுடன் கூடிய கவிதைத் தொகுதி.