அஸாத் எம்.ஹனிபா. தெகிவளை: அஸாத் எம்.ஹனிபா, 48/5/ஏ, ஆசிரி மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கொழும்பு 10: UDH Compuprint, 51/42, Mohideen Masjid Road).
xix, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×13 சமீ., ISBN: 978-955-54758-0-8.
வைத்திய கலாநிதி அஸாத் எம்.ஹனிபா எழுதிய கவிதைத் தொகுதி. கிழக்கிலங்கை கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் கல்முனை வெஸ்லி கல்லூரி, ஸாஹிராக் கல்லூரி, ஆகியவற்றில் கற்று மகப்பேற்று வைத்தியத்துறையில் பட்டம் பெற்றவர். பாடசாலைக் காலம், பல்கலைக்கழகக் காலங்களில் தான் நேரடியாகப் பார்த்து நெஞ்சில் ஆறாத வடுக்களாக நிலைத்த நினைவுகளை 34 கவிதைகளாக்கியிருக்கிறார். போர்க்காலத்தில் ஏற்பட்ட அவலங்கள், அழிவுகள், அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்புக் கெடுபிடிகள், விடுதலைப் போராளிகளின் மீதான கோபம் என்பன பல கவிதைகளில் ஊடுபரவியுள்ளன. எனக்குத் தெரியாதவை, பிணம் தின்னும் சாஸ்திரம், எஞ்சியுள்ள எச்சங்கள், வித்துடல்கள், தலைவரின் தவிப்பு, அனுதாபச் செய்தி, எப்போது வருவாய், கலையாத கருவும் மரிக்காத சிசுவும், முதுமை, ஊமையின் உயில், நிராயுதபாணி, வாய்பேசும் முலையூட்டி, நீ தேடும் நான், எனது அமைச்சு, காணிக்கை, ஆத்மாவின் புண், கைவரிசை, போலிச்சித்திரம், என்முந்தானை முடிச்சு, உலகப் போர், செருப்புச் சோடி, உனது நோய், தடுப்பூசி, மணியோசை, 26.12.2004, வெற்றுடம்பு வீரர்கள், தாய்ப்பால், வெறுத்துப்போன வெள்ளம், அப்பாவி வானம், அன்புள்ள நோன்பு, விஷ ஆணி, தள்ளுவண்டி, போர் உழுத ஊர், என் இருப்பு நீ ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் வடிக்கப்பட்டுள்ளன.