க.அருள்ராஜ். கொழும்பு 14: க.அருள்ராஜ், இல.211/63, நாகலகம் வீதி, 1வது பதிப்பு, 2007. ((கொழும்பு : லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).
ix, 36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-50564-0-3.
கொழும்பில் கிராண்ட்பாஸ் எனப்படும் பாலத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் குருத்துவக் கல்வியைத் தொடரும் மெய்யியல் பட்டதாரியாவார். இவர் எழுதிய கவிதைகளில் மெய்யியல் அடிநாதமாக ஒலிக்கின்றன. மனசே காரணமே, பக்தியால் உணர்ந்திடலாம், மனிதா, தெய்வமும் குழந்தையும், தேடல், உறவு, அன்னையே, அன்பு, சிரிப்பழகு, சூரிய உதயம், கடலோரக் காற்று, காதலது தப்பில்லை, காதல், பெப்ரவரி 14, கலைந்தது என் கனவு, நீயும் பேதையே, நீ அறியாயோ, நினைத்ததில்லை, புதுயுகம் படைப்போம், இயற்கை உன்னை மாற்றும், நம்பிக்கை ஒளி ஆகிய 21 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42784).