காத்தான்குடி மதியன்பன். காத்தான்குடி: அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (வெள்ளவத்தை: நவ்ஹான் பிரஸ்).
(19), 97 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-41343-0-0.
மதியன்பனின் கவிதைகள் தனது சொந்த ஊர் சம்பந்தப்பட்ட விடயங்கள், பொதுவாக முஸ்லிம் சமுதாயம் பற்றிய விடயங்கள், முஸ்லிம் அரசியல், தேச அரசியல், சமூகப் பேடிமை, மார்க்க முரண் என்று பல்வேறு விடயங்களை பேசுபொருளாகக் கொண்டது. நூலின் தலைப்பு இதனை ஒரு காதல் கவிதைத் தொகுப்பாகக் காட்டினாலும், உள்ளே உள்ள 36 கவிதைகளும் காதல் சம்பந்தப்படாத பல்வேறு விடயங்களைச் சொல்கின்றன. விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள், சாராயப் போத்தலும் சாப்பாட்டுப் பார்சலும், மஹிந்த மன்னருக்கு மதியின் மடல், தண்ணீரைத் தாண்டிய தேசம், புலிகள் இல்லாத தேசத்தில் எலிகளுக்கு என்ன வேலை போன்ற நீளமான தலைப்புக்களை அத்தனை கவிதைகளும் கொண்டுள்ளன.