இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு 2 (கிழக்கு மாகாணம்): இரா.கிருஷ்ணபிள்ளை, மலரகம், நடராஜானந்தா வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (காரைதீவு 12: நிதுஸ் ஓப்செற் அச்சகம்).
iv, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
காரைதீவை வாழ்விடமாகவும், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கொண்ட கவிஞரும் எழுத்தாளருமான இராகி ஒரு கலைப்பட்டதாரி ஆசிரியராவார். இராகியின் முதல் நூல் உறவுகள் என்ற தலைப்பில் 2008இல் வெளியாகியது. 50 ஆண்டுகால இலக்கியப் பரிச்சயம் மிக்க இவரது முதல் சிறுகதை பாண்டியூர் இராகி என்ற புனைபெயரில் சரியா தப்பா என்ற தலைப்பில் 1964இல் சுதந்திரனில் வெளிவந்தது. இந்நூலில் இராகியின் தேர்ந்த 51 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஓரிரு புதுக்கவிதைப்பாணியில் அமைந்தவை தவிர்ந்த பெரும்பாலான கவிதைகள் மரபுவழிக் கவிதைகளாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47451).