10488 இருட்டினில் ஓர் இதயம்: கவிதைத் தொகுதி.

கலா (இயற்பெயர்: புவிமலர் புவனேந்திரராஜா). புத்தளம்: சிந்தியா வெளியீடு, சிந்தியா கலை இலக்கிய வட்டம், 22/17, முதலாம் ஒழுங்கை, கடுமையான்குளம் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புத்தளம்: A and A Printers, 24, Shopping Complex).

48 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

தனது ஆரம்பக் கல்வியை வவனியா திருக்குடும்ப கன்னியர் மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை இலவன்குளம் வித்தியாலயத்திலும் வர்த்தகத் துறையிலான தனது பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்ட புவிமலர் இளம்வயதிலிருந்தே கவிதை, சிறுகதைத் துறைகளில் ஈடுபட்டு வந்தவர். சிந்தியா கலை இலக்கிய வட்டத்தின் மாதாந்த கலை இலக்கிய நிகழ்வுகளில் கவியரங்கக் கவிபாடித் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டவர். இவர் இதுவரை எழுதிய 45 கவிதைளில் காதலர் தினம், அவள் யாரோ, காதலிக்காக, இளமை ஊஞ்சலாடுகிறது, அழகிய பூ, தொடர்கதை, நம்பிக்கை, தோட்டத்துப் பூ, புதியஉலகம், எம் காதல் ஒரு கானல்நீரா, அண்ணாவுக்கு ஒரு அன்பு மடல், நிவர்த்தி, சின்னச் சின்ன ஆசை, இதயக் கின்னஸ், வேலை இல்லாப் பட்டதாரி, தீ, விலகவா பழகினோம்?, கானல் கற்பனை, பல்கலைக்கழகம், உறவின் மாற்றம், பிரம்மச்சாரி, சாதிக் கொடுமை, ஜாதிப் பெண், பட்டம், குயில், உழைத்தோங்கும் இலவங்குளம், வறுமையின் கொடுமை, இருட்டினில் ஓர் இதயம், சுதந்திரம், தூங்கா விளக்கு, முரண்பாடு, வறுமைக்கோட்டின் கீழ் ஆகிய 32 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தியா வெளியீட்டு வரிசையில் ஐந்தாவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29095).

ஏனைய பதிவுகள்