கெக்கிறாவை ஸஹானா (இயற்பெயர்: ஏ.சித்தி ஜஹானறா). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர்; 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
iv, 87 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-51679-3-2.
சித்தி ஜஹானறா என்ற இயற்பெயர் கொண்ட கெக்கிறாவ ஸஹானா 1968இல் பிறந்தவர். ஈழத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். ஒரு தேவதைக் கனவு (சிறுகதைத் தொகுப்பு), இன்றைய வண்ணத்துப் பூச்சிகள் (கவிதைத் தொகுதி), ஒரு கூடும் இரு முட்டைகளும் (குறநாவல்), சூழ ஓடும் நதி (ஆய்வுநூல்) ஆகிய நூல்களை எழுதியவர். தொடர்ந்தும் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர். கடியானும் கட்டை விரலும் என்ற கவிதை தொடங்கி ஓ அட்மிரா ஓ பொஸ்கோ ஈறாக கெக்கிறாவ ஸஹானாவின் 71 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவரது கவிதைகள் தன்னைச் சூழவுள்ள, தனக்கு மிக அணுக்கமான விடயங்களை மாத்திரமல்லாது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம், குஜராத் பூகம்பம், என்று விரிந்த உலகை நாடியும் சென்று கவிமொழி பேசுகின்றன. இந்நூல் 15ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.