பா.திலீபன், செ.மதுரகன். வவுனியா: தமிழ் மாமன்றம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(18), 98 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.
வன்னிப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இரு இளம் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. பாலசிங்கம் திலீபன் கிளிநொச்சி பூநகரியில் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர். செல்வராசா மதுரகன் வவுனியா பூந்தோட்டத்தில் பிறந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர். இருவரும் இலங்கை கம்பன் கழகத்தின் இலக்கியப் பின்புலத்தில் வளர்ந்தவர்கள். இந்த இரண்டு இளம் மருத்துவர்களின் புதுக்கவிதைத் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. திலிபனின் 29 கவிதைகளும், மதுரகனின் 47 கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.