தர்மினி பத்மநாதன். வவுனியா: வி.கே.பத்மநாதன், ரோசா ஜுவல்லர்ஸ், இல. 97 டீ, பஜார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2000. (வவுனியா: ஜீ.எச். பிரின்டர்ஸ், இல. 164, மன்னார் வீதி, குருமண்காடு).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மினி தனது ஆரம்பக் கல்வியை யாழ். புனித மரியாள் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடத்திலும் வவுனியா திருக்குடும்பக் கன்னியர் மடத்திலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவியாகவும் அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் மாணவியாகவும் உள்ளார். அதே வேளையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கோலப் பயிற்சிநெறி ஆசிரியையாகவும், பாரதி தமிழோசைக் கழக வவுனியாக் கிளை இணைப்பாளராகவும் வவுனியா கலை இலக்கிய வட்ட அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். 90களிலிருந்து கலை இலக்கியத்துறையில் தீவிர ஈடுபாடுகொண்ட இவ்விளம் படைப்பாளி சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், சிறுவர் இலக்கியம் என அனைத்து வடிவங்களிலும் ஆர்வத்துடன் முயற்சிசெய்பவர். இவரது கன்னிக் கவிதைத் தொகுப்பு இது.