சதாசிவம் மதன். மட்டக்களப்பு: அன்னை வெளியீடு, கூட்டுறவுக் கடை வீதி, புதுக்குடியிருப்பு-5, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(11), 61 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 17.5×12 சமீ.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மதன் என்ற இளம் கவிஞனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. வைத்தியத் தாதியாகக் கடமையாற்றும் இவரது 47 கவிதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பேராசிரியர் செ.யோகராஜாவின் முன்னுரையுடன் கூடிய இத்தொகுதியின் கவிதைகள் பெரும்பாலான கவிஞர்கள் எடுத்தாளும் பாசம், இயற்கை, காதல், நட்பு போன்ற விடயங்களைப் பேசுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53659).