10505 உளி: கவிதைத் தொகுதி. 

வயலற் சரோஜா (இயற்பெயர்: சீ.கத்தரின் வயலெற்). திருக்கோணமலை: திருமதி வயலற் சரோஜா, சாணக்கியன் வெளியீட்டகம், 1295/1, பாலையூற்று, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி).

124 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ. 

ஆசிரியரின் மனதில் மலர்ந்த 64 புதுக்கவிதைகளின் தொகுப்பு இது.  முரண்பாட்டுப் பூட்டுகளை உளி கொண்டு உடைத்தெறிந்து முன்னேறிச் சாதனை படைக்குமாறு அறைகூவல் விடுகிறார். பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள் என்ற கவிதை பெற்றோரின் அறியாமையைக் களையும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. அடைக்கும் தாழ், அகிம்சை, அழிவிற் பிறப்பது ஆக்கமே, அறுத்துவிடு, அடிமை, அறியாமை,  அக்கினிகள் போன்ற கவிதைகள் மனித அவலங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்பார்க்கின்றன. இறுதிச் செதுக்கல், இமையான காதல், இலங்கை அகதிகளை நோக்கிப் பட்டினத்தடிகளார், உன்னைத் தள்ளிவிடும் போன்ற கவிதைகளில் நம்பிக்கைத் துரோகம், அகதிகளின் அந்தஸ்து என்பன பற்றிப் பேசப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52903).

ஏனைய பதிவுகள்

10319 தொல்காப்பியம்: சொல்லதிகாரம்: சேனாவரையருரையும்.

சி.கணேசையர் (பதிப்பாசிரியர்). மயிலிட்டி தெற்கு: நா.பொன்னையா, ஈழகேசரி, 1வது பதிப்பு ஜனவரி 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxxi, 428+65 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 22×14 சமீ. தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட

Totally free Slots No Obtain Or Registration

Blogs Pharaohs fortune pokie machine: Earliest Crash Gambling Approach: Everything you need to Discover No deposit Incentive No Betting Private Bonuses To possess Dedicated Professionals

16833 ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல் “எரிமலை”: ஒரு நுண்ணாய்வு.

ராஜரட்ணம் ருக்ஷான். ஹப்புத்தளை: நெம்புகோல் பதிப்பகம், நா செவன, வல்ஹப்புதென்ன, ஹல்தும்முல்ல, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (சென்னை 600 117: ஸ்ரீதுர்கா பிரின்டர்ஸ், 4ஏ, பூபதி நகர், கீழ்க்கட்டளை). xxii, 232 பக்கம்,