ஈ.வெ.ரா.தாசன் (ஆர்.இராமச்சந்திரன்). கண்டி: ரிவடேல் ஜங்ஷன், எனிவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 17.5×13 சமீ.
கண்டி மு.இராமச்சந்திரன், ஈ.வெ.ரா பெரியாரின் கொள்ளைகளைப் பினபற்றிவருபவர். 1987 முதல் ஏராளமான நூல்களை எழுதியவர். கண்டி மு.ராமச்சந்ரன், ஆர். முத்துக்கருப்பன் என்ற வேறு பெயர்களிலும் எழுதியிருக்கிறார். ‘எதிரும் புதிரும்’ என்ற தலைப்புக்கொண்ட இந்நூல் இவரது 47ஆவது பிரசுரம். முன்னுரை தொடங்கி சைனீஸ் பாணி வரை மொத்தம் 36 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சாதியக் கொடுமை, குழந்தைகள் நிலைமை, பெண்கள் நிலை, அரசியல் ஏமாற்று, கலைஞர் நிலை, தோட்டத் தொழிலாளர் நிலை, இன ஒடுக்குமுறை, மூட நம்பிக்கைகள், பழமைக் கருத்துக்கள், பொதுவுடமை, போலி சோஷலிசவாதிகள், பாரதி, பாரதிதாசன் என இவரது பாடுபொருள்கள் விரிந்து பரந்தவை. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 172208).