த.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: அருணன் பதிப்பகம், நல்லூர், 1வது பதிப்பு, வைகாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
iv, 147 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×13 சமீ.
சமகால ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் த.ஜெயசீலன் வடமராட்சி வடக்கு பிரதேசச் செயலாளராகப் பணியாற்றுகிறார். ஓசை நுணுக்கங்களைச் சிறப்பாகக் கையாளும் வல்லமைபெற்ற இக்கவிஞரின் கவிதைகள் பெரும்பாலும் மரபுக்கவிதைகளின் சாயலைக்கொண்டவை. முன்னர் கனவுகளின் எல்லை (2001), கைகளுக்குள் சிக்காத காற்று (2004) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவை யுத்தக் கொடுமைகள், தேசிய உணர்வு, விடுதலை வேட்கை, மானிட மகத்துவம் போன்றவற்றைப் பாடுபொருளாகக் கொண்டிருந்தன. 9 ஆண்டுகால இடைவெளியில் வெளியாகியுள்ள எழுதாத ஒரு கவிதையின் 110 கவிதைகளிலும் இயற்கை, இயற்கையோடு ஒன்றிய வாழ்வு, மனிதம் ஆகியவை பாடுபொருள்களாகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54392).