கவிஜீ வினோ. முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜுலை 2015. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
viii, 64 பக்கம், படங்கள், விலை: ரூபா 180., அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-955-42446-0-3.
வலிகளைச் சுமந்து வரும் ஈழத்துக் கவிதைகளிடையே ஒரு மாற்றாக காதலைச் சுமந்து வருகின்றது இக்கவிதைத் தொகுப்பு. சமூகம் சார்ந்தும், தத்துவார்த்தங்கள் சார்ந்தும் இணைய வலைப்பூக்களில் வலம்வந்த இக்கவிஞன் இந்தத் தொகுதியின் வாயிலாக காதலைப் பாடும் ஈழத்துக் கவிஞனாக அரங்கேறியிருக்கிறார். வசனப்பாங்கான கவி வரிகளை காதலைப் பாடத் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவில் பிறந்த வினோ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைத் தொடர்ந்தவர்.