தஷந்தி சங்கர். கொழும்பு: தஷந்தி சங்கர், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: ராஜ் பிரவீன் பிரின்டர்ஸ், 98ஏ, விவேகானந்தா மேடு).
54 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
‘என் எண்ணச் செயற்பாடுகளைச் சொற்களுக்குள் சிறைப்பிடித்து, சுவைச் சிறகுகளுக்குச் சேதமில்லாமல் சேர்த்துவைத்திருக்கிறேன். வாசித்துச் சிறைமீட்டுக் கூட்டிச் செல்லுங்கள். என் கற்பனை வரிகளுக்கு நானே விளக்க விலங்கு பூட்ட விரும்பவில்லை. ரசிப்பதும் விமர்சிப்பதும் உங்கள் மன வானத்துக்குச் சொந்தமானவை’ என்ற அறிமுகத்துடன் இக்கவிஞை தன் கன்னிக் கவிதைத் தொகுதியைத் தன் திருமண நாளன்று வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45545).