இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு (கிழக்கு மாகாணம்): கணேஸ்வரி குடிசார் நிர்மாணங்களும் ஆலோசனைகளும், 36ஏ, மத்திய வீதி, காரைதீவு 5, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: றோயல் பிரின்டர்ஸ்).
xv, 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்து மண்ணின் விளைச்சலாக இத்தொகுப்பு அமைகின்றது. ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. இன்பியல் உணர்வுகளையும் இயற்கை எழில்களையும் முதலாகக் கொண்டு காதல், கல்வி, தேசியம், தத்துவம், பண்டிகைகள், விழாக்கள், வழிகாட்டல்கள், பக்தி எனப் பல விடயங்களைப் பகிர்ந்துள்ளார். இன்பியல் உணர்வுகள் என்ற பிரிவில் 3 பாடல்களும், இயற்கையின் எழில்கள் என்ற பிரிவில் 3 பாடல்களும், காதல் பாடல்கள் என்ற பிரிவில் 3 பாடல்களும், கல்வி ஒழுக்கம் என்ற பிரிவில் 3 பாடல்களும், தேசிய அவலங்கள் என்ற பிரிவில் 3 பாடல்களும், தத்துவப் பாடல்கள் என்ற பிரிவில் 7 பாடல்களும், பண்டிகைகள் என்ற பிரிவில் 3 பாடல்களும், விழாக் கீதங்கள் என்ற பிரிவில் 5 பாடல்களும், வாழ்வின் வழிகாட்டிகள் என்ற பிரிவில் 5 பாடல்களும், பக்திப் பாமாலைகள் என்ற பிரிவில் 7 பாடல்களுமாக மொத்தம் 42 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57340).