10517 ஒரு துளி வாழ்வு: கவிதை.

கவின்மகள் சுதாகரி மணிவண்ணன். செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப் பற்று, 1வது பதிப்பு, 2015. (செங்கலடி: மடோனா அச்சகம்).

xviii, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-42654-0-0.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பலவற்றையும் சுதாகரி,  மனித வாழ்க்கையையும், மனித நடத்தைகளையும் பற்றிய தனது தரிசனங்களாகவும், தேடல்களாகவும்  வெளிப்படுத்துகின்றார். சிலவற்றை இயற்கையோடு பொருத்திப் பார்ப்பதாகவும், சிலவற்றைப் போதனை செய்யும் பாங்கிலும் எழுதியுள்ளார். வாழ்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வாக அன்பு என்பதே இனம்காணப்படுகின்றமை இவரது கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது. சமகால அரசியல் நிகழ்வுகளைக் கண்டு குமுறும் போக்கும் சில கவிதைகளினூடாக வெளிப்படுகின்றது. மானிட வாழ்வின் பன்முக தரிசனமே இக்கவிஞையின்  இலக்கியப்பாதையாக அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுதாகரி மணிவண்ணன் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் பாடசாலையிலும் பெற்றவர். மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டு முதுமாணிப்பட்டம் வரை கற்றுத் தேர்ந்தவர். கிழக்கிலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.

ஏனைய பதிவுகள்