செல்லக்குட்டி கணேசன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
xiii, 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4676-23-7.
செல்லக்குட்டி கணேசன் தன் கவிதைகளினூடாக சமுதாயத்துக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதோடு, சமுதாயத்தில் காணப்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றார். கவிஞரின் மன அவசங்களுக்கான வடிகால்களாகவும் இக்கவிதைகள்அமைந்துள்ளன. சமூகக் கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகளைச் சாடுபவையாகவும், காலத்துக்கு ஒவ்வாத மனிதர்களையும் அவர்களின் நம்பிக்கை வரட்சியையும் தோலுரித்துக் காட்டுவனவாகவும் இழந்துபோன வாழ்வின் உன்னதங்களுக்காக ஏங்குபவையாகவும், போலியாக வாழ்பவர்களின் நடிப்புக்களை ஏளனம் செய்பவையாகவும் உரிமையற்று வாழும் மனிதர்களின் சுபீட்சத்தினைத் தேடுபவையாகவும் வாழ்வின் முரண் நிலைகளில் நின்றுகொண்டு வாழ்வியலின் தத்துவங்களைத் தேடுபவையாகவும் அமைந்த உள்ளடக்கங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. கவிதையின் வடிவம், அதற்கான மொழி என்பதற்கும் அப்பால், கவிதைப் பொருளின் சமுதாய முக்கியத்துவம் குறித்து இந்தக் கவிதைத் தொகுதியிலடங்கும் கவிதைகளின் முக்கியத்துவம் தீர்மானிக்கப்படும். இந்நூல் ஜீவநதியின் 42ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.