சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, மூன்றாவது தளம், C.C.S.A கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
64 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8637-23-4.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 107ஆவது நூலாக இக்கவிதைநூல் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் தமிழ்மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். அவரது வீச்சான கவிதைகள் மானுட நேயத்தை விளக்குவனவாக அமைந்துள்ளன. 27 கவிதைகளில் பெரும்பாலானவை போர்ச் சூழலை விபரிக்கின்றன. அநியாயத்தை எதிர்த்து நிற்கத் தூண்டுகின்றன. எதிரியின் முறுவல், கல்லெறி தூரம், தோழர் சந்திரகுமார் நினைவாக, தாயுள்ளம், தீயின் அழகியல், தண்ணீர் தண்ணீர், சொற்கள், போரின் மொழியிற் கூறப்படும் கதைகள், போராளித் தோழருக்கு, நாமென்ன செய்கின்றோம், பயங்கரவாதியாக இருத்தல் பற்றிய ஒரு சிந்தனை, அமைதி வரும்போது, பௌத்த திரு நாடே, கடலில் அக்கரை போனோரே, மொழி பற்றிய ஒரு போர் நிறுத்தச் சிந்தனை, கேளாமல் வந்த கடல், வேண்டுதல், தொழிற்பெயர், புகைவண்டிப் பயணங்கள், பிச்சை பற்றிய ஒரு சிந்தனை, சிலந்தி பற்றிய ஒரு சிந்தனை, மாவலியின் மேலிருந்து, பல வண்ணக் காடு, முடிந்தொழிந்த கதை பற்றிப் பேசாதிருப்பதற்கு, பேரம், புரிந்தும் புரியாதும் புரிந்தன, நிபுணத்துவம் ஆகிய தலைப்புக் கவிதைகள் இத்தொகுப்பிற்காக ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.