த.மேரா (இயற்பெயர்: த.மேகராசா). வந்தாறுமூலை: தமிழியற் கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, புரட்டாதி 2005. (செங்கலடி: இளவேனில் அச்சகம்).
viii, (8), 44 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்பு மாணவரான மேகராசா மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர். ஈழப்பித்தன், மேரா போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ள இவர் இத்தொகுதியில் வாழ்க வளமுடன், வெளிநாட்டு மாப்பிள்ளை, புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒரு புத்தகத்தின் ஏக்கம், டிசெம்பர் 26, நீ அழகி, பட்டமரம் என இன்னோரன்ன 39 தலைப்புகளில் இயற்றிய கவிதைகளை இணைத்து வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37678).