வே. நடராஜா. கொழும்பு 6: வேலுப்பிள்ளை நடராஜா, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (சென்னை: டிஜிட்டல் இமேஜிங்).
216 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
நூலாசிரியர் வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் தான் படைத்த கவிதைகளை காஞ்சி காமாட்சிக்கு அர்ச்சித்த மலர்கள், கண்ணனுக்கு அர்ச்சித்த மலர்கள், இறைவனுக்கு அர்ச்சித்த மலர்கள், தமிழ் மலர், பாச மலர், கள்ளிப் பூக்கள், நெருஞ்சி மலர்கள் ஆகிய ஏழு பிரிவுகளாக வகுத்து இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33975).