10538 காதோடு வாய் புதைத்து.

பொலிகை ச.திருப்பதி. வல்வெட்டித்துறை: கண்ணன் பதிப்பகம், ‘பிள்ளை நிலா’, கொற்றாவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (அல்வாய்: மதுரன் கிறாப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டர்ஸ், அல்வாய் வடமேற்கு).

48 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

ஈழகேசரி, சுதந்திரன் பத்திரிகைக் காலத்துக் கவிஞர் பொலிகை ச.திருப்பதி பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த மூதறிஞர். யாப்பு இலக்கணத்தை முறையாகக் கற்று மரபுவழி நின்று கவிதை யாப்பவர். சந்தச்சிறப்பு, உவமைச்சிறப்பு, உருவகச் சிறப்பு ஆகிய அணிநலன்கள் பொருந்தியதாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. இந்த நூலில் இவர் எழுதிய 27 கவிதைப் படைப்புக்கள் உள்ளன. விருத்தப்பா, வெண்பா, கும்மிப்பாடல் முதலிய வகைகளை இவை உள்ளடக்கியுள்ளன. கவிதைகளின் கருப்பொருளாக தீண்டாமை, சுகாதாரம், கயமை, வான்மறை, உடல்நலம், நாகரீகச் சீரழிவு,  விவசாயம், தோட்டத்தொழிலாளர் என்பன அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

Păcănele Online Demo

Content Novomatic sloturi de jocuri: Cele Tocmac Mari Câștiguri De Sloturi Online Jocuri De Aparate Cele Mai Bune Cazinouri Să Jocuri Novomatic Pe 2023 Starlight