நெடுந்தீவு தனு. முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xii, 44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42447-0-2.
நெடுந்தீவைச் சேர்ந்த இளம் படைப்பாளி தனு, பல்வேறு தலைப்புகளில் மூலம் இந்நூலில் தன் உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கிறார். இவரது கற்பனைகளும் சிந்தனைகளும் கோபங்களும் நாகரீகமாக அவற்றை வெளிப்படுத்தும் விதமும் அவரது பதிவுகளுக்கு அழகுசேர்க்கின்றன. தன்னைச்சுற்றியுள்ள சமூகத்தின் அசைவுகளை உன்னிப்பாய் அவதானித்து அதன் ஏற்ற இறக்கங்களை, தெளிவான வாழ்வியல் தாக்கங்களை அற்புதமாக வாசகரின் மனங்களில் பதியம் வைக்க முயன்றுள்ளார்.