10546 கூவாதே கூடுகட்டு: கவிதைத் தொகுப்பு.

மாணிக்கம் ஜெகன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, வைகாசி 2014. (வவுனியா: தீபன் அச்சகம், இல.18, யாழ். வீதி).

111 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54446-0-6.

சமூக, பொருளாதார, அரசியல் அவலங்களை ஜெகனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சுட்டிநிற்கின்றன. மொத்தம் 71 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாடகத்துறையில் மிகுந்த பரிச்சயமுள்ள இக்கவிஞன் தன் நாடகத்துறை யுத்திகளை ஆங்காங்கே தன் கவிதைகளிலும் பொருத்திப் பரிசோதித்துள்ளார். நினைவூட்டல் என்ற கவிதையில் யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் இடப்பெயர்வு வாழ்வியல் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. இக்கவிதை போலவே வேறும் பல கவிதைகள் இடப்பெயர்வு, அகதிமுகாம் வாழ்வு, புலப்பெயர்வு என்ற ஈழத்தமிழர்களின் சோகங்களை உணர்வுடன் பதிவுசெய்துள்ளன. பல்வேறு பாடுபொருள்களை எடுத்துக்கொண்டாலும், அதீதமாக அரசியல்சார் சமூகப் பிறழ்வுகளை அதிகம் சுட்டிக்காட்ட முற்பட்டுள்ளார். தனிமனித உணர்வுநிலை கடந்த விமர்சனங்களை சமூகத்தின் மீதே முன்வைக்கிறார். பெண்ணியச் சிந்தனை கொண்ட ஆண் எழுத்தாளராகத் தன்னை பெண் என்ற கவிதையில் காட்டியிருக்கிறார். சாமஸ்ரீ, தேசகீர்த்தி, கலை இலக்கியச் சுடர், சமூகச்சிற்பி, பல்கலைச்சுடர், கலைப்புயல், புரட்சிக்கவிஞர் போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் இவர் தன்வசப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 30ஆவது வெளியீடு இது.

ஏனைய பதிவுகள்