10547 சடலத்தின் வேண்டுதல்: கவிதைகள்.

மிஹிந்தலை ஏ.பாரிஸ். அனுராதபுரம்: படிகள் பதிப்பகம், அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு, 1வது பதிப்பு, வைகாசி 2014. (அநுராதபுரம்: புதிய விமாலி அச்சகம்).

(2), 78 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41337-0-9.

மிகிந்தலை ஏ. பாரிஸ், வானொலி மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதிய 29 கவிதைகளின் தொகுப்பு. அனேகமான கவிதைகள் இலங்கையின் போர்க்காலத்தைப் பிரதிபலிக்கின்றன. இன நல்லுறவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஒரு இராணுவ வீரனான பாரிஸ், தனது சீருடைக்கு அப்பால் உள்ள இதயத் துடிப்பினை சிறந்த புதுக்கவிதைகளாக்கித் தந்துள்ளார். சமூகத்தின் அவலங்களையும் அனுபவங்களையும் வெளிக்காட்டுவதாக வெளிவந்திருக்கும் நூல் இது. வதந்தியின் வலியை  வெளிப்படுத்தும் வாந்தி வேண்டாம் என்ற கவிதை, தனது கல்விக்காக உழைக்கும் தந்தையின் மனமறியாமல் தறிகெட்டுத் திரியும் பிள்ளையையிட்டு ஒரு தந்தையின் புலம்பலாக அமையும் வீட்டை எரிக்கும் நிலா, கடல் அலையின் கோர வடுக்களை மீள நினைவூட்டும் சடலத்தின் வேண்டுதல் என்பன உள்ளிட்ட  பெரும்பாலான கவிதைகளும் சமூக விழுமியங்கள் பேணப்படவேண்டியதை செய்தியாகச் சொல்கின்றன.

ஏனைய பதிவுகள்

The best Free Spins Incentives

Articles Browse this site | No-deposit Added bonus Canada The continuing future of 100 percent free Spins In the Nz Casinos on the internet Finest

On-line casino Bonuses Quickest Payout

Posts Any kind of charges of the punctual profits during the online casinos?: Bonuses PA Casinos on the internet Better 5 Punctual Paying Instantaneous Detachment

14266 அரசறிவியல் அறிமுகம். எஸ்.கீதபொன்கலன்.

கொழும்பு: சந்தியாபிள்ளை கீதபொன்கலன், விரிவுரையாளர், வரலாற்று அரசறிவியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 12: சீ.வீ.ஆர். பிரின்டர்ஸ், குணசிங்கபுர).vii, 164 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.