சு.முரளிதரன், அகளங்கன். நுவர எலிய: ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயம், அக்கரப்பத்தனை, 1வது பதிப்பு, ஜுன் 1985.
(48) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டுள்ள மலையகக் கவிதைகளின் தொகுதி. ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்களாக இருந்த வேளையில் இருவரும் இணைந்து எழுதிய கவிதைத் தொகுதி இதுவாகும். பல்வேறு உசாத்துணைகளிலும் இந்நூல் பற்றி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளபோதிலும், இன்றளவில் (2016) இந்நூல் அச்சுவாகனம் எறவில்லை. கல்லச்சுப் பிரதிகளாகவே இலக்கிய உலகில் வலம்வந்துகொண்டுள்ளது. (தகவல்: அகளங்கன்).