சுருதி. நோர்வே: நோர்வே ஈழத்தமிழர் அவை, இணை வெளியீடு, நோர்வே நாடு கடந்த தமிழீழ அரசு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (நோர்வே: ஸ்மார்ட் அச்சகம்).
38 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யுத்த வலயத்திலிருந்து உடலால் தப்பிப் பிழைத்த மனிதநேயன், ஊடகவியலாளன், அவனது ஆறமுடியா மனக்காயம் இந்நூலிலுள்ள கவிதைகளின் வழியாக சிறு வாக்குமூலமாகின்றது. இக்கவிதைகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாகவும் எதிரொலியாகவும் ஒலிக்கின்றன. சித்திரங்கள் அந்தச் சூழலை எம் கண்முன் நிறுத்துகின்றன.