10550 சிதையும் என்னுள்.

மெலிஞ்சிமுத்தன் (இயற்பெயர்: விஜயநாதன் இயூஜின் மசனெட்). மன்னார்: வி. இ. மசனெட், முத்தரிப்புத் துறை, முருங்கன், 1வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

1975இல் இலங்கையில் பிறந்த மெலிஞ்சிமுத்தன் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். இத்தொகுதியில் இவர் படைத்த 34 கவிதைகள் பிரதிபலிப்பு, பிரசவம், யார் இவர்கள், போனவளை எண்ணி, தேடல், அன்புள்ள அவளுக்கு, சில கனவுகள், முத்தூர், பசிப்பவன் பார்வை, ஒரு பிரஜையின் பயணம், தழும்புகள், வேண்டுகோள், சிதையும் என்னுள், எதற்காக, கடவுள் விற்கும் கசாப்புக் கடைகள், பாலைவனப் பயணிகள், விழிவாசலில், இளமைக் குமுறல், மனிதம் மரணித்த மண்ணில், வாசல்களில், மருந்து வேண்டும்,  நாம் யார், எங்கே நிற்கிறீர்கள், குமரிப் பூக்கள், உபதேசம், சமூகம், தவிப்பு, இரவின் ஆட்சியில், கைதிகள், விளம்பரம், என்று விடியும், மீன்கொத்தி, தயாராகுங்கள், வாரங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39989).

ஏனைய பதிவுகள்